சென்னை | அக்டோபர் | 2019
தொடரும் இதழ் குறித்து - ஜெயகாந்தன்
‘தமிழில் சிறுபத்திரிகை என்று சொல்லப்படும் பல பத்திரிகைகள் சிறப்பான பத்திரிகைகள். பல பெரிய எழுத்தாளர்களை உருவாக்கித் தந்த நாற்றங் கால்கள் அவை. மகாகவி பாரதி நடத்திய ‘இந்தியா’ போன்ற பத்திரிகைகள்கூட இந்தச் சிறுபத்திரிகை வகையைச் சேர்ந்தவைதான். நவீன தமிழிலக்கிய வளர்ச்சியில் இத்தகைய சிறு பத்திரிகைக்கு ஒரு நெடிய வரலாறே உண்டு.
பாரதியார் காலத்துக்குப் பிறகு தோன்றிய ‘மணிக்கொடி’ என்ற சிறு பத்திரிகைதான் தமிழுக்குப் பல புதிய முன்னோடி எழுத்தாளர்களைத் தந்தது எனலாம். புதுமைப்பித்தன், கு.ப.ரா. மௌனி போன்ற எழுத்தாளர்களுக்குப் பிறகு சுந்தரராமசாமி, ஜெயகாந்தன் ஆகிய இருவரும் அறிமுகமானது ‘சரஸ்வதி’ என்ற சிறுபத்திரிகை மூலமே.
கடந்த முப்பது ஆண்டுகளாக எண்ணற்ற சிறுபத்திரிகைகள் தோன்றி, அவற்றில் பல சிறப்பாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
‘தொடரும்’ என்ற பெயரில் அத்தகு சிறுபத்திரிகை ஒன்று சில இலக்கிய ஸஹ்ருதயர்களின் முயற்சியினால், சிங்கம்புணரி என்ற சிற்றூரிலிருந்து வெளிவருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னால், சில இலக்கிய மாணவர்களால் கையெழுத்துப் பத்திரிகைபோல் ‘தட்டச்சு இதழாக’ வெளியிடப்பட்ட ‘தொடரும்’ இப்போது ஒரு காலாண்டு இதழாகத் தொடர்ந்து
எளிய முறையில் வந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.’
- ஜெயகாந்தன்,
‘மறுபடியும் நினைத்துப் பார்க்கிறேன்’ குமுதம் வார இதழ். (டிசம்பர் 2000)
இணைந்திருங்கள்
ஜெயகாந்த சபை மீண்டும் கூடுகிறது.
சஹ்ருதயர்களை அன்போடு வரவேற்கிறோம்!
எப்போது?
2019 அக்டோபர்
(நாள் விரைவில் அறிவிக்கப் பெறும்)
எங்கே?
சென்னையில்
(இடம் விரைவில் அறிக்கப் பெறும்)
(ஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமை)
பன்னாட்டுக் கருத்தரங்கம்
தொடர்புக்கு
முனைவர் மு.பழனியப்பன்,
ஜெயகாந்தம் பன்னாட்டுக் கருத்தரங்கம்,
104, மெ.மெ. வீதி, A1 சேது பிளாட்ஸ்,
காரைக்குடி - 630 001.
பேச: 94429 13985 | 94420 43657 | 94431 90440
மின்னஞ்சல்: thodarumjk@gmail.com
முகநூல் பக்கம்: ஜெயகாந்தம்